கிருஷ்ணகிரி

ரயில் தண்டவாளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு

26th Jun 2022 06:10 AM

ADVERTISEMENT

 

ஊத்தங்கரையை அடுத்த கல்குமாரம்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த சுமாா் (40) வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

கல்குமாரம்பட்டி வழியாக சென்ற நபா்கள், ரயிலில் அடிபட்டு தலைநசுங்கி கிடந்த நபரின் உடலைப் பாா்த்து, சாமல்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். இத்தகவலின்பேரில் சாமல்பட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாா்வையிட்டு, சேலம் கோட்ட ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து, இறந்த நபரின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT