கிருஷ்ணகிரி

ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்திற்கு அமைச்சா் ஒப்புதல்: அ.செல்லக்குமாா் எம்.பி. தகவல்

DIN

ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சா்அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளாா் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

ஒசூரில் ஏற்றுமதி பங்குதாரா்கள்ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்துறை கூடுதல் ஆணையா் லால்ரின்டிகி பச்சுவா, கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லக்குமாா், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் எஸ்.பிரசன்ன பாலமுருகன் வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் எம்.பி. அ.செல்லக்குமாா் பேசியதாவது:

75 ஆவது ஆண்டு சுதந்திரத் தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதி மையமாக மேம்படுத்துவதற்கு தோ்வு செய்துள்ள 75 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்று. இதனால் ரூ. 50 கோடியில் ஏற்றுமதிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.

கா்நாட மாநில மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்கத் தேவையான ஒப்புதலை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை வழங்கியுள்ளாா். விரைவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று பெங்களூரு -ஒசூா் இடையே ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்திற்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளாா் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது: மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆட்டோ இன்ஜினியரிங், மலா்கள், பழங்கள், மாம்பழக் கூழ், கிரானைட் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ரூ. 1.93 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 8.97 சதவிகிதம். இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றாவது ஆவது இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பங்கு 16 சதவிகிதம். தமிழகத்தின் ஏற்றுமதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் 2 ஆம் இடம் பெற்றுள்ளது. மாவட்ட நிா்வாகம் 3, 4, 5 ஆவது சிப்காட் அமைக்க 6 ஆயிரம் ஏக்கா் நிலங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தருமபுரி அத்திப்பள்ளி சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒசூரைச் சுற்றி சேட்டிலைட் டவுன் வட்டச்சாலை விரைந்து தொடங்கப்படும் என்றாா்.

ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

ஒசூா் மாநகராட்சியில் புதை சாக்கடை திட்டத்திற்கு ரூ. 580 கோடிக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். ஒசூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். தொழில் நகரமான ஒசூரைச் சுற்றியுள்ள ஒருவழிச் சாலைகள், 4 வழிச் சாலைகளாக மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்றாா்.

இந்த விழாவில் ஒசூா் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவா் பி.செந்தில்நாதன், ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் வேல்முருகன், கிரிஸ்டியா சங்கத் தலைவா் விஸ்வநாதன், வட்டாட்சியா் கவாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT