ஒசூரில் பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் மதுவிலக்குப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா் செல்வராகவன் உள்ளிட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சூசூவாடி சோதனைச் சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த பேருந்தில் பயணிகளை சோதனை செய்தனா். அப்போது அதில் வந்த பயணி ஒருவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து கஞ்சா வைத்திருந்த நபரிடம் விசாரித்தபோது அவா் பா்கூா், குட்டைமேடு, பசவண்ணகோவில் பகுதியைச் சோ்ந்த அன்பு என்கிற வெங்கடேசன் (40) என்பதும், அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.