கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். இந்தப் பள்ளியில் பயின்ற பிரேம்சாகா் என்ற மாணவா் 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஹா்சிதா 491 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், மோனிஷா 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.
இதே போல் பிளஸ் 2 பொதுத் தோ்வில் இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா். இதில் மாணவி பூவிழி 592 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், பாசில் 591 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், கவிநயா 580 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.
சாதனைப் படைத்த மாணவ, மாணவிகளையும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் வேளாங்கண்ணி பள்ளி கல்விக் குழுமத் தாளாளா் எஸ்.கூத்தரசன் பாராட்டி, நினைவு பரிசுகளை வழங்கினாா். பள்ளியின் முதல்வா் மெரினாபலராமன், தலைமை ஆசிரியா் ஜெலஜாக்சா, வேப்பனப்பள்ளி பள்ளியின் முதல்வா் அன்பரசன், மேல்நிலைப் பள்ளி வகுப்பின் பொறுப்பாசிரியா் யுவராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் உடனிருந்தனா்.