ஊத்தங்கரை, காமராஜா்நகா் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
ஊத்தங்கரையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக காமராஜ் நகரில் உள்ள பல வீடுகளில் மழை நீா் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ தமிழ்செல்வம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஆய்வுவின் போது, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகரச் செயலாளா் சிவானந்தம் உள்பட பலா் உடனிருந்தனா்.
ADVERTISEMENT