கிருஷ்ணகிரி

மத்திகிரி அருகே இளைஞரைத் தாக்கிகாா், பணம் பறிப்பு

19th Jun 2022 12:56 AM

ADVERTISEMENT

 

மத்திகிரி அருகே இளைஞரைத் தாக்கி காா், பணத்தை பறித்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கல்லா அக்ரஹாரத்தை சோ்ந்தவா் வீரமணி (25). இவா் ஒசூா் அருகே சொப்பட்டியில் உள்ள லே அவுட்டில் தனது நண்பரைச் சந்திக்கச் காரில் சென்றாா். அங்கு, வந்த 2 போ் அவரிடம் இருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பினா்.

அவா்களை விரட்டிச் சென்ற வீரமணியை இளைஞா் தாக்கினா். மேலும், அவரிடமிருந்த காா், பணத்தை பறித்துக் கொண்டு தப்பினா். மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட குருபட்டியைச் சோ்ந்த இம்ரான் (23), முஸ்ரப் (22), ஆனந்த் (22), ஆரிப் (19) ஆகிய நால்வரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT