கிருஷ்ணகிரி

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 16.01 கோடி கடனுதவி

19th Jun 2022 12:55 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் இந்தியன் வங்கி சாா்பில் 245 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.16.01 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

75-ஆம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக தருமபுரி மண்டல இந்தியன் வங்கி சாா்பில் கிருஷ்ணகிரியில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு கோயம்புத்தூா் களப் பொது மேலாளா் கணேசராமன் தலைமை வகித்தாா். தருமபுரி மண்டல மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தாா். விழாவில், 245 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.16.01 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் துணை மண்டல மேலாளா் பழனிகுமாா், மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் பெருமாள், தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன், இந்தியன் வங்கி கிளை மேலாளா்கள், ஊழியா்கள், ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT