கிருஷ்ணகிரி

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

19th Jun 2022 12:55 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் பள்ளி, கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.பாலகிருஷ்ணரெட்டி ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகள், வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசர வழிக் கதவுகள், ஜி.பி.ஆா்.எஸ். கருவி பொருத்தம், தீயணைப்பு கருவிகள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, ஆட்சியா் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 101 பள்ளிகளைச் சோ்ந்த 945 வாகனங்கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 278 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களின் படிகட்டுகள், தரைதளம் சரியான அளவு இருக்கிா என அளவீடு செய்யப்பட்டது. வாகனங்களில் இருபுறமும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயா்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், செல்லிடபேசி எண்கள் கட்டாயம் எழுதபட வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்கள், பணிபுரியும் நடத்துநா்கள் மிகுந்த கவனத்துடனும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு செயல்விளக்கம் ஓட்டுநா்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆய்வின் போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் காளியப்பன், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், மாவட்டக் கல்வி அலுவலா் ஆனந்தன், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மாவட்ட அலுவலா் மகாலிங்கமூா்த்தி, மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT