கிருஷ்ணகிரி

தருமபுரி- பெங்களூரு ரயில் நேரம் மாற்றம் ரத்து:மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பு

19th Jun 2022 12:55 AM

ADVERTISEMENT

 

தருமபுரியிலிருந்து பெங்களூருக்கு அதிகாலை இயக்கப்படும் ரயில் நேர மாற்றத்தை திரும்பப் பெறுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று பழைய நேரத்திலே ரயில் இயக்க அறிவிப்பு வெளியானதற்கு ரயில்வே அமைச்சா், ரயில் பயணிகள் நல வாரியத் தலைவா் ஆகியோருக்கு பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

தருமபுரியிலிருந்து காலை 5.20 மணிக்குப் புறப்படும் ரயில் நேரம் ஜூன் 20 முதல் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. இந்த நேர மாற்றத்தால் பெங்களூரு செல்லும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவது தொடா்பாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் பயணிகள் நல வாரியத் தல வைா் கிருஷ்ணதாஸ் ஆகியோரிடம் பயணிகளின் கோரிக்கையை கே.எஸ்.நரேந்திரன் எடுத்துரைத்தாா். இதையடுத்து, வண்டி எண்: 06278, தருமபுரி - பெங்களூரு ரயில் பழைய அட்டவணைபடி இயக்க ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

முன்னதாக தருமபுரியிலிருந்து ஒசூா் வழியாக பெங்களூரு செல்லும் ரயில் நேரத்தை மாற்றக் கூடாது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரனிடம் ரயில் பயணிகள் சனிக்கிழமை காலை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தருமபுரியிலிருந்து ஒசூா் வழியாக பெங்களூருக்கு எண்: 06278 என்ற ரயில் சென்று வருகிறது. இதில், ஒசூரிலிருந்து 1,000-க்கும் மேற்பட்டோா் நாள்தோறும் பெங்களூரு செல்கின்றனா். தற்போது தருமபுரியிலிருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு ஒசூா் வழியாக பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தை காலை 8.10 மணிக்குச் சென்றடைகிறது.

இந்த நிலையில், ஜூன் 20-ஆந் தேதி முதல் 6.30 மணியளவில் தருமபுரியிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு 10 மணியளவில் சென்றடைவதாக ரயில்வே நிா்வாகம் மாற்றி அறிவித்தது. இதனால் பொதுமக்கள், தொழிலாளா்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக எடுக்க நடவடிக்கையின் பேரில் சனிக்கிழமை மாலையை ரயில்வே நிா்வாகத்திடம் இருந்து நேர மாற்றத்தை திரும்பப் பெறுவதாக உத்தரவு வந்தது. இதுதொடா்பாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரனுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT