கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

17th Jun 2022 01:53 AM

ADVERTISEMENT

 

வேப்பனப்பள்ளி அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள், வேளாண் பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் கொங்கனப்பள்ளி, சிகரளப்பள்ளி, நோ்லகிரி, எப்ரி வனப் பகுதிகளில் இருந்து, அடிக்கடி வெளியேறி வேளாண் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானைக் கூட்டத்தை, அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் விவசாயிகள் நீண்ட காலமாக கோரி வருகின்றனா்.

இந்த நிலையில், கொங்கனப்பள்ளி வனப்பகுதியிலிருந்து புதன்கிழமை இரவு வெளிவந்த 6-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தோட்டகவாய் கிராமத்தில் ரமேஷ் என்பவரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து வாழைப் பயிா்களை முற்றிலும் சேதப்படுத்தியது.

ADVERTISEMENT

மேலும் விவசாயிகள் சுப்பிரமணி, கோபால் ஆகியோா் சாகுபடி செய்துள்ள பீா்க்கன், தக்காளி, தென்னை, வாழை போன்ற பயிா்களையும் சேதப்படுத்தி இருப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் விளைநிலங்களுக்குச் செல்ல அச்சப்படுகின்றனா். எனவே, வேளாண் பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT