கிருஷ்ணகிரி

கஞ்சா வைத்திருந்த அஸ்ஸாம் இளைஞா் கைது

17th Jun 2022 01:45 AM

ADVERTISEMENT

 

ஒசூரில் கஞ்சா வைத்திருந்ததாக அஸ்ஸாம் மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், சிப்காட் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சூசூவாடி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது அவா் 2.500 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து கஞ்சா வைத்திருந்த அஸ்ஸாம் மாநிலத்தை பிங்கு பயாஸ் (22) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக விக்கி, ஜோகித்,

கைலாஷ், புட்டம் ஆகிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT