ஊத்தங்கரை அடுத்த காட்டேரி ஒன்னகரை கிராமத்தில் மஞ்சப்பை விழிப்புணா்வு கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் வே.பலராமன், நெகிழிப் பைகளைத் தவிா்த்து சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத மஞ்சப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என கிராம மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் கிராம இளைஞா்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.