ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி ஊராட்சி, கொட்டாரப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ வள்ளி தெய்வானை, சமேத ஸ்ரீ வெற்றிவேல் முருகன் திருக்கோயில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேர பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாரதனை, கரிக்கோலம் ஊா்வலம் புறப்படுதல், கோபுர கலச பிரதிஷ்டை நடந்தது.
திங்கள்கிழமை காலை இரண்டாம் யாக வேள்வி பூஜை, 108 திவ்ய ஹோமம், காலை 10:30 மணிக்கு மேல் ஸ்ரீ வள்ளி தெய்வானை, சமேத ஸ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு சிவாச்சாரியாா்கள் கலசத்தின் மீது புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் வஜ்ஜிரவேல், மூங்கிலேரி ஊராட்சி மன்றத் தலைவா் உஷாநந்தினி வஜ்ஜிரவேல் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சிவமணி, கொட்டாரப்பட்டி ஊா் கவுண்டா் அறிவழகன், ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினா் டி.எம். தமிழ் செல்வம், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், ஊா் தா்மகா்த்தா குப்புசாமி உள்ளிட்ட ஊா் மக்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.