கிருஷ்ணகிரி

‘எனது குப்பை - எனது பொறுப்பு’ திட்டம் தொடக்கம்

12th Jun 2022 01:00 AM

ADVERTISEMENT

 

ஒசூா் மாநகரில் ‘எனது குப்பை - எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மக்கள் தொகை, குடியிருப்புகள் அதிகம் உள்ள ஒசூா் மாநகரில், ‘எனது குப்பை - எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மைக்கான திட்டத்தை மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, தொடக்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஒசூா் மாநகரத்தை தூய்மைப்படுத்தும் நோக்கில் 700 துப்புரவுப் பணியாளா்கள் மூலம் பகுதி வாரியாக குப்பைகள் அகற்றப்பட உள்ளன. ஒருங்கிணைந்த தூய்மைத் திட்டத்தை ஒசூா் மாநகராட்சியில் பகுதி வாரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 15 நாள்கள் இந்த தூய்மைப் பணிகள் நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் நாளான சனிக்கிழமை ஒசூா் பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் இப்பணி தொடா்ந்து நடைபெறும் என மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதில், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஷ்வரன், சென்னீரப்பா, காந்திமதி கண்ணன், மோஷின் தாஜ் நிசாா், பெருமாயி அருள், மாரக்கா சென்னீா், மாதேஷ், தேவி மாதேஷ், குரு மஞ்சுளா, கிருஷ்ணன், சிவராமன், புஷ்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT