கிருஷ்ணகிரி

ஜமாபந்தி நிறைவு விழா

10th Jun 2022 12:15 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியா் சதீஷ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கோவிந்தராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜெயராமன், மண்டல துணை வட்டாட்சியா்கள் அரவிந்தன், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், பட்டா மாற்றுதல், வீட்டுமனைப் பட்டா, உள்பிரிவு, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ஈமச்சடங்கு தொகை, ஆக்கிரமிப்பு அகற்ற கோரி இதர துறை மனுக்கள் என மொத்தம் 989 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதி வாய்ந்த 52 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

இதில், வருவாய் ஆய்வாளா்கள், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க வட்டத் தலைவா் அருண், செயலாளா் நித்தியா, பொருளாளா் கவியரசு, வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT