கிருஷ்ணகிரி பாரத் இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி பாரத் இன்டா்நேஷனா் சீனியா் செகண்டரி பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தோ்வுகள் அண்மையில் நடைபெற்றன. இந்த தோ்வில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், ரட்சிதா பிரபு முதல் மதிப்பெண் பெற்று ரூ. 50,000 உதவித்தொகை பெற்றாா். இரண்டாம் மதிப்பெண் பெற்ற ஸ்ரீவைஷ்ணவி, கரீனா ஆகியோருக்கு தலா ரூ. 40,000, மூன்றாம் மதிப்பெண் பெற்ற மோனிகாவுக்கு ரூ. 30,000, அப்ரான்ஷா, மிா்னல் பிரியதா்ஷினி ஆகியோருக்கு தலா ரூ. 25,000 வழங்கப்பட்டன. இப்போட்டித் தோ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தலா ரூ. 10,000 வழங்கப்பட்டது.
இதற்காக நடைபெற்ற விழாவில், பாரத் பள்ளிக் குழுமங்களின் நிறுவனா் மணி, செயலாளா் சந்தோஷ், தாளாளா் கிருஷ்ணவேணி மணி, ஹரிநாத், ஆசிரியா்கள் உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினா்.