ஒசூா் அருகே கண்டெய்னா் லாரியில் ரூ. 15 கோடி மதிப்பிலான கைப்பேசிகளை திருடிய வழக்கில், மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடந்த 2020 அக். 21-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் கைப்பேசி தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தனியாா் கைப்பேசி நிறுவனத்துக்கு 15 பெட்டிகளில் 13,920 எண்ணிக்கை கொண்ட ரூ. 15 கோடி மதிப்பிலான கைப்பேசிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த மேலுமலை அருகே சென்ற போது, வட மாநிலக் கொள்ளையா்களால் ஓட்டுநா்கள் தாக்கப்பட்டு கைப்பேசிகள் திருடப்பட்டன.
இந்த வழக்கில், தனிப்படை போலீஸாா் மத்தியப் பிரதேசம் சென்று 2021-இல் 13 பேரை கைது செய்திருந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் 4 பேரையும் ஒசூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பெங்களூரு சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.