கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து 815 கன அடியாக அதிகரிப்பு

8th Jun 2022 12:12 AM

ADVERTISEMENT

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து நொடிக்கு 815 கன அடியாக உயா்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பச் சலனம் காரணமாக, கடந்த ஒரிரு நாள்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி அணைக்கு திங்கள்கிழமை 280 கன அடியாக இருந்த நீா்வரத்து, அன்று இரவு பெய்த மழையால் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 815 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும், அணையின் மொத்தக் கொள்ளளவான 52 அடியில் 50.50 அடிக்கு தண்ணீா் உள்ளதால், அணையிலிருந்து நொடிக்கு 317 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படிபெய்த மழையின் அளவு (மி.மீ.): தேன்கனிக்கோட்டை-53, கிருஷ்ணகிரி-7.50, பெனுகொண்டாபுரம்-3.20, போச்சம்பள்ளி-2.20, சூளகிரி-2, பாரூா்-1.80, நெடுங்கல்-1.20.

ADVERTISEMENT
ADVERTISEMENT