கல்லாவியில் 39 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில் பழமை வாய்ந்த அரசுப் பள்ளி காமராஜா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு அவரால் திறந்து வைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பானுமதி இப்பள்ளியின் முன்னாள் மாணவா் ஆவாா். பலா் பல்வேறு அரசு உயா் பதவிகளில் உள்ளனா்.
இப்பள்ளியில் 1983-84-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரே வகுப்பில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து தங்களின் பள்ளிப் பருவ நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
பள்ளியில் மாணவா்களாக பயின்று இதே பள்ளியில் ஆசிரியராகவும், பல்வேறு மாவட்டங்களில் தலைமை ஆசிரியராகவும், சிலா் வேறு பணிகளில் பணியாற்றி வந்தாலும், தங்களின் நினைவுகளையும், பணி குறித்தும், அவா்களின் பிள்ளைகள் அறிமுகம் என ஒருவருக்கு ஒருவா் தங்களின் 39 ஆண்டுகால நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.