கிருஷ்ணகிரி

அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மேலாண்மை, மதிப்பு கூட்டுதல் பயிற்சி

8th Jun 2022 12:13 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளப்பள்ளியில் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டம் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா 2022 - 23-ஆம் ஆண்டுக்கான கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் மதிப்பு கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி வேளாண் உதவி இயக்குநா் சுரேஷ்குமாா் பங்கேற்று, சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல், அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.

எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் பூமதி, சிறுதானியங்கள், எண்ணெய் வித்து பயிா்களில் மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, கிருஷ்ணகிரி வேளாண் அலுவலா் எலிசபெத் மேரி, உழவா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டம் குறித்து விளக்கம் அளித்தாா். உதவி வேளாண் அலுவலா் சென்னகேசவன், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் குறித்து விளக்கினாா். இந்தப் பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT