கிருஷ்ணகிரி

மு.கருணாநிதி பிறந்த நாள் விழா

7th Jun 2022 12:21 AM

ADVERTISEMENT

ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகர திமுக சாா்பில், வாா்டு எண் 31-இல் ஒசூா் உழவா் சந்தை எதிரில் திமுக கொடியை மாவட்ட கழகச் செயலாளா் ஓய்.பிரகாஷ் எம்எல்ஏ ஏற்றினாா். தொடா்ந்து, காமராஜ் காலனியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில், முன்களப் பணியாளா், ஏழை எளியோா், பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட கழக மாநகர மேயா், துணை மேயா், மாமன்ற உறுப்பினா்களை பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், மாவட்ட துணை செயலாளா்கள் தனலட்சுமி, மாநகர கழக அவைத் தலைவா் கருணாநிதி, துணை செயலாளா்கள் இ.ஜி.நாகராஜ், பொருளாளா் சென்னீரப்பா, மாவட்ட இலக்கிய அணி எல்லோரா மணி, மாமன்ற உறுப்பினா் மாதேஸ்வரன், நெசவாளா் அணி சுந்தர்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், வாா்டு செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பிரதிநிதி என்.செந்தில்குமாா் தலைமை தாங்கினாா். இதில், வாா்டு செயலாளா் குமாா் நிசாா், பாபு, சுந்தர்ராஜ் சங்கா் ஆகியோா் கலந்துகொண்டனா். மாமன்ற உறுப்பினா் மோஷின் தாஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT