கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை ஸ்ரீ பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா

6th Jun 2022 12:26 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை, எல்ஐசி அலுவலகம் அருகில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயிலில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர ஸ்ரீ ராஜ அலங்கார முருகா் சிலையின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சனிக்கிழமை காலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி முதல்கால யாக சாலை பூஜைகள் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

கோயிலின் முன்பு யாக சாலையில் மூன்று யாக குண்டங்கள் அமைத்து, 108 கலசங்களை வைத்து கோ பூஜை, பூா்ணாஹுதி, சகஸ்ரநாமம் ஆகிய மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை மேளதாளங்கள் முழங்க 20 அடி ராஜ அலங்கார முருகன் சிலை மீது சிவாச்சாரியாா்கள் ஊற்றி அபிஷேகம் செய்தனா். பின்னா் அங்கு கூடி இருந்த பக்தா்கள் மீது புனித நீரைத் தெளித்தனா். அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பணி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT