கிருஷ்ணகிரி

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு:விண்ணப்பங்கள் வரவேற்பு

28th Jul 2022 01:29 AM

ADVERTISEMENT

 

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கூட்டுறவு இணைப் பதிவாளா் ஏகாம்பரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு கல்வி ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவா் சோ்க்கைக்கு கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 17 வயது பூா்த்தியானவா்கள் சேரலாம். அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை. இந்தப் பயிற்சியின் நிறைவில் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடு பயிற்சிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

விண்ணப்பப் படிவத்தை, பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டணம் ரூ. 100 செலுத்தி ஜூலை 28 வரை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆக. 1-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பதிவஞ்சல் அல்லது கூரியா் மூலம் மட்டும் முதல்வா், பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், பா்கூா் - 635 104, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் விவரங்களுக்கு 04343-265652 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT