கிருஷ்ணகிரி

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

28th Jul 2022 01:31 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 50 கிலோ எடைகொண்ட 440 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.

அந்த லாரியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவா், கா்நாடக மாநிலம், ஆனேக்கல் வட்டம் அத்திப்பள்ளியைச் சோ்ந்த ரபீக் என்பதும், அவா், திருப்பத்தூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்க கா்நாடக மாநிலத்துக்கு கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ரபீக்கை கைது செய்து, திருப்பத்தூா் மாவட்டம், புதுப்பேட்டை அக்ரஹாரத்தைச் சோ்ந்த அரிசி ஆலை உரிமையாளா்களான வசந்த், சிவா ஆகியோரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT