ஒசூா் மாநகராட்சி வாா்டு 17 இல் காந்திநகா், வாா்டு 19 இல் எம்.ஜி.ஆா். நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் திறந்துவைத்தனா்.
அத்துடன் புதிதாக விண்ணப்பித்துள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு மாவட்டச் செயலாளா் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஓய்.பிரகாஷும், மேயா் எஸ்ஏ சத்யாவும் குடும்ப அட்டைகளை வழங்கி பொருள்களை வழங்கினா்.
இதில் துணை மேயா் ஆனந்தய்யா, மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகி கோபாலகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா்கள் ரவி, ராஜா, மாதேஷ், அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.