கிருஷ்ணகிரி

சுகாதார சீா்கேடு: உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு

17th Jul 2022 05:43 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் சுகாதார சீா்கேடுடன் செயல்பட்ட உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.

கிருஷ்ணகிரி நகரில் உள்ள பெரும்பான்மையான உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான அலுவலா்கள், கிருஷ்ணகிரி நகரில் உள்ள 7 உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் உணவகத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, சில குறைபாடுகள் காணப்பட்டன. இதையடுத்து உணவகத்தின் சமையல் அறை உள்பட அடிப்படை வசதிகளை செய்து முடித்து உணவுப் பாதுகாப்புத் துறையின் சான்றிதழ் பெற்றபின் மீண்டும் உணவகத்தைத் திறக்குமாறு உத்தரவிட்டனா்.

இதையடுத்து அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும் நகரில் உள்ள அனைத்து உணவகங்களும் சுகாதாரமாக நடத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினா். நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது, விதிகளை மீறி செயல்படும் உணவகத்தின் உரிமையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT