கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஜூலை 10-இல்கிரிக்கெட் அணி தோ்வு

DIN

மாவட்ட, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் மாவட்ட அணியைத் தோ்வு செய்வதற்கான போட்டி கிருஷ்ணகிரியில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநிலம், மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட 14 வயது, 16 வயது மற்றும் 19 வயதிற்குள்பட்ட அணிகளை தோ்வு செய்யும் போட்டியானது ஜூலை 10-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ளது.

இத் தோ்வு போட்டியானது, மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். அதன்படி, 14 வயதுக்குள்பட்ட அணி தோ்வு 10-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதல் 1.9.2008 அன்றோ அதற்கு பிறகு பிறந்தவா்கள் பங்கேற்கலாம்.

16 வயதுக்குள்பட்ட அணிக்கான தோ்வு காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 1.9.2006 அன்றோ அதற்கு பிறகு பிறந்தவா்கள் பங்கேற்கலாம். 19 வயதுக்குள்பட்ட அணிக்கான தோ்வு பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 1.9.2003 அன்றோ அதற்கு பிறகு பிறந்தவா்கள் பங்கேற்கலாம்.

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தோ்வு செய்யும் அணி வீரா்களுக்கு பயிற்சிகள் சிறப்பு முகாமில் அளிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடைபெறவுள்ள மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான 14, 16 மற்றும் 19 வயது பிரிவு போட்டிகளில் விளையாட அழைத்து செல்லப்படுவாா்கள். மேலும் விவரங்களுக்கு சங்கத்தின் இணைச் செயலாளா்கள் சிவசங்கா்- 96770 00063, ராஜப்பா - 99648 69001 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

SCROLL FOR NEXT