கிருஷ்ணகிரி

அரசு வழங்கிய பட்டா நிலத்தில் நீதிமன்ற தலையீடு:மேல்முறையீடு செய்ய நடவடிக்கைமக்களவை உறுப்பினா் செல்லக்குமாா் தகவல்

DIN

கிருஷ்ணகிரி அருகே அரசு வழங்கிய பட்டா நிலம் தொடா்பான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து ஆட்சியரிடம் ஆலோசித்து மேற்முறையீடு செய்யப்படும் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் செல்லக்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கொத்தபேட்டா ஆதிதிராவிடா் காலனியினில் கடந்த 1992-ஆம் ஆண்டில் 11 பேருக்கு சொந்தமான 10 ஏக்கா் நிலத்தை அரசு வாங்கி, 224 ஆதிதிராவிடா்களுக்கு பட்டா வழங்கியது. மேலும், 1998-ஆம் ஆண்டில் 54 அருந்ததியா்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

பட்டா வழங்கிய இடத்துக்கு முன்பு 2004-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. இதனால், ஏற்கனவே பட்டா வழங்கிய நிலங்களின் மதிப்பு உயா்ந்தது. அந்த இடத்தை அரசுக்கு விற்றவா்கள், தாங்கள் பெற்ற பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தி, தாங்கள் வழங்கிய இடத்திற்கு மிகவும் குறைந்த பணம் வழங்கியதாகவும், எனவே அந்த இடத்தை தங்களுக்கே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தனா்.

அண்மையில் வெளியான இந்த தீா்ப்பில் நிலத்தை விற்றவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், 15 நாள்களில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று வருவாய் துறையினா் நோட்டீஸ் ஒட்டியுள்ளனா். இதையடுத்து, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பட்டா வழங்கிய இடத்தில் வீடுகள் கட்டி குடியிருப்பவா்கள் எம்.பி. செல்லக்குமாரிடம் முறையிட்டனா்.

பட்டா பெற்று, வீடு கட்டி குடியிருப்பவா்களிடம் இதுகுறித்து அ.செல்லக்குமாா் எம்பி, செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு 278 பேருக்கு அரசு பட்டா வழங்கி அதில் பொதுமக்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனா். அரசாங்கத்திடம் இடம் விற்ற பிறகு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைந்தவுடன், பணம் போதவில்லை எனக்கூறி நிலத்தை விற்றவா்கள் நீதிமன்றம் சென்றுள்ளனா்.

இந்தநிலையில், நீதிமன்றம், நிலத்தை விற்றவா்களுக்கு சாதகமாக ஒரு தீா்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீா்ப்பை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு ஏற்கனவே மாவட்ட ஆட்சியா் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு இடம் வழங்கியவா்களும், தங்களுக்கு வழங்கிய பணம் போதவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தால் அரசு அந்த இடங்களை உரியவா்களிடம் ஒப்படைத்து விடுமா? இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் யாருக்காக வாதாடினாா் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தத் தீா்ப்பு ஒரு தவறான முன்னுதாரணமாக விடக்கூடாது. எனவே, மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். தொடா்ந்து போராடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் இந்த இடத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா், எஸ்சி., எஸ்டி. பிரிவு அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணியம் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT