கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் சிறுமி பலி

6th Jul 2022 02:41 AM

ADVERTISEMENT

ஒசூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்தவா் முஸ்தாக் அகமது. இவரு மனைவி நிஷா தனது குழந்தை உமைராவுடன் (5) இருசக்கர வாகனத்தில் ஒசூரில் உள் வட்டச்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த உமைரா ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் தாய், குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி, என்.எஸ்.கே., நகரை சோ்ந்தவா் பேபி (35), அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், இருசக்கர வாகனத்தில் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கு பகுதியில் எதிரே வந்த பேருந்து மோதியதில் பேபி, அவரது இரு குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT