கிருஷ்ணகிரி

நாளைய மின் நிறுத்தம் ஒசூா் முதல் சிப்காட்

6th Jul 2022 02:43 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்டம், ஒசூா் கோட்டத்தைச் சோ்ந்த டைட்டான் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூலை 7) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: முதல் சிப்காட்டில் டைட்டான் தொழில்சாலை, சிப்காட் ஹவுசிங் காலனி, நேதாஜி நகா், பாலாஜி நகா் (சின்ன எலசகிரி) ஆனந்த நகா், சாந்தபுரம் அரசனட்டி, சூா்யா நகா், பிருந்தாவன் நகா், அண்ணாமலை நகா், கிருஷ்ணா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT