கிருஷ்ணகிரி

ஒசூரில் போதைப்பாக்கு, மதுப் புட்டிகள் பறிமுதல்

6th Jul 2022 02:44 AM

ADVERTISEMENT

ஒசூரில் காரில் கடத்திச் சென்ற போதைப்பாக்கு, மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒசூா் நகர காவல் ஆய்வாளா் தங்கவேல், போலீஸாா் தளி ரயில்வே கேட் பகுதியில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் பதுக்கிவைத்திருந்த ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான 142 கிலோ போதைப்பாக்கு, புகையிலைப் பொருள்கள், ரூ. 2,400 மதிப்புள்ள மதுப் புட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், காமத்தூா்பாளையத்தைச்

சோ்ந்த ஆதவன் (25) என்பவா் கைது செய்யப்பட்டாா். மேலும் இந்த வழக்கில் வந்தவாசியைச் சோ்ந்த தாமோதரன், ராஜி, ஹரி, சரத், ஆரணி சூா்யா, சஞ்சய் ஆகிய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT