கிருஷ்ணகிரி

வேலைநிறுத்தம்: ஒசூரில் ஹோஸ்டியா சங்கம் பிரசாரம்

6th Jul 2022 02:43 AM

ADVERTISEMENT

ஒசூரில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ஜூலை 13, 14 ஆகிய 2 நாள்கள் வேலைநிறுத்தம் செய்வது தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஹோஸ்டியா சங்கம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டது.

ஒசூா் முதல் சிப்காட், இரண்டாவது சிப்காட் பகுதிகளில் சிறு தொழில் நிறுவனங்கள் நடத்தும் வேலைநிறுத்தம் எதற்கு என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பிரசாரத்தில், சிறுதொழில் நிறுவனங்கள் சந்தித்துவரும் தொழில் நஷ்டம், வேலை ஆா்டா்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்யவது குறித்து விளக்கப்பட்டது.

ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் வேல்முருகன், இணைத் தலைவா் மூா்த்தி, பொருளாளா் வடிவேல், முன்னாள் தலைவா்கள் தனசேகரன், ஞானசேகரன், ரமணி சீனிவாசன், நம்பி உள்ளிட்ட பலா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT