கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் உழவா் தின ஊா்வலம்

6th Jul 2022 02:45 AM

ADVERTISEMENT

உழவா் தினத்தையொட்டி, தமிழக விவசாயிகள் சங்கம் (ராமகவுண்டா்) சாா்பில் கிருஷ்ணகிரியில் விவசாயிகள் பங்கேற்ற ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் இலவச மின்சாரம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களில் உயிா்நீத்த தியாகிகளின் அஞ்சலி நினைவாக நடைபெற்ற ஊா்வலம், கிருஷ்ணகிரி எல்ஐசி அலுவலகம் அருகே தொடங்கி, வட்டச் சாலை அருகே நிறைவு பெற்றது.

மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் அணிச் செயலாளா் வெங்கடேசன், ஆலோசகா் நசீா் அகமத், மகளிா் அணித் தலைவி பெருமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். வேளாண் சாா்ந்த தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிா்சேதம் செய்யும் வனவிலங்குகளை சுட, விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தெளிவுபடுத்த வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு 15 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT