கிருஷ்ணகிரி

ரூ. 8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

5th Jul 2022 02:52 AM

ADVERTISEMENT

ஒசூா் வழியாக சேலத்துக்குக் கடத்த முயன்ற ரூ. 8 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை சரக்கு வேனுடன் போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனா்.

ஒசூா் வட்டம், மத்திகிரி காவல் நிலைய போலீஸாா் பூனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா். வேனில் 62 பைகளில் மொத்தம் 1,639 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா,

ஹான்ஸ், பான் மசாலா ஆகியவை இருந்தன. அதன் மதிப்பு ரூ. 8 லட்சத்து 4 ஆயிரம். அதையும், ரூ. 18 லட்சம் மதிப்புள்ள சரக்கு வேனையும் போலீஸாா்

ADVERTISEMENT

பறிமுதல் செய்தனா்.

பொருள்களைக் கடத்தி வந்ததாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுழியைச் சோ்ந்த மணி (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், பெங்களூரில் இருந்து சேலத்துக்கு இந்த குட்கா கடத்தப்பட்டது தெரியவந்தது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT