கிருஷ்ணகிரி

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை

5th Jul 2022 02:53 AM

ADVERTISEMENT

சின்ன ஆலரஅள்ளியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறு அப்பகுதி விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஒன்றியம் குள்ளம்பட்டி ஊராட்சியில் உள்ள சின்னஆலரஅள்ளி கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயில்கின்றனா். 6 ஆசிரியா்கள் கல்வி கற்பிக்கின்றனா். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மேசை நாற்காலி இல்லாததால், தரையில் அமா்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவா், சமையல் அறை உள்ளிட்டவை அமைத்து தர வேண்டும் என அதில் அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT