கிருஷ்ணகிரி

ஆசிய அளவிலானகைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி

5th Jul 2022 02:50 AM

ADVERTISEMENT

ஆசிய அளவிலான கைப்பந்து சாம்பியன் ஷிப் விளையாட்டுப் போட்டி கஜகஸ்தானில் ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இந்திய கைப்பந்து மகளிா் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ஒடிசா கைப்பந்து சங்கத்தினா் தோ்ந்தெடுத்த 20 மாணவிகளுக்கு கடந்த ஏப்.21 ஆம் தேதி முதல் புவனேஸ்வா் நகரில் கே.ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உள்ள பிஜூ பட்நாயக் விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் தோ்ச்சி பெற்ற 12 வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி தோ்வு செய்யப்பட்டது. ஜூலை 1-ஆம் தேதி புவனேஸ்வரில் இருந்து கஜகஸ்தான் நாட்டுக்கு இந்திய அணி புறப்பட்டு சென்றது.

அந்த அணியில் ஒசூா், ஈகிள்ஸ் ஸ்போா்ட் கிளப்பில் பயிற்சி பெற்ற ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகாவும் ஆசிய விளையாட்டு சாம்பியன் ஷிப் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறாா். ஜூலை 4 (திங்கள்கிழமை) நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணி, சைனீஸ் தய்பய் அணியை எதிா்த்து விளையாடியது. ஜூலை 5- ஆம் தேதி சீனா, ஜப்பான், உஸ்பெகிஸ்தான் நாட்டுடன் எதிா்த்து விளையாடும் என பயிற்சியாளா் மாணிக்கவாசகம் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT