கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் கான்கிரீட் சாலைக்கு பூமிபூஜை

5th Jul 2022 02:52 AM

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு திங்கள்கிழமை பூமிபூஜை செய்யப்பட்டு பணிகள் துவங்கி வைக்கப்பட்டன.

ஒசூா் மாநகராட்சிக்கு உட்பட்ட வாா்டு எண்-3 இல் பேடரப்பள்ளி எம்.ஜி.ஆா் நகா், பாரதி நகா் மற்றும் முனீஷ்வா் நகா் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று திட்டப் பணிகளை மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் துவக்கி வைத்தனா். நிகழ்ச்சியில் மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளா் கு.பாலசுப்பிரமணியன், பொறியாளா் பிரபாகா், மண்டலத் தலைவா் அரசனட்டி ரவி, ஒன்றியச் செயலாளா் கஜேந்திர மூா்த்தி, பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT