கிருஷ்ணகிரி

மாணவா் விடுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

5th Jul 2022 02:53 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கி பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

விடுதியில் மாணவா்களுக்கு அடிப்படை வசதிகள் உணவு, கழிப்பிடம், குடிநீா், படுக்கை அறை வசதிகளை அவா் பாா்வையிட்டாா். பின்னா் மாணவா்கள், விடுதி காப்பாளரிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், ஒன்றியப் பொருளாளா் சேட்டு குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT