கிருஷ்ணகிரி

தனியாா் மேல்நிலைப் பள்ளிக்கு ஊக்கப்பரிசு

5th Jul 2022 02:54 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி, ஜூலை 4: கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியா்களை ஊக்கப்படுத்தும் வகையில், ரூ. 29 ஆயிரம் மதிப்பிலான ஊக்கப் பரிசுகளை ஐவிடிபி நிறுவனா் அண்மையில் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தனிப் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்ற மாணவிகள் மற்றும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகள் என மொத்தம் 20 மாணவிகளுக்கு தலா ரூ. 1,024 மதிப்பிலான டைட்டன் கைகடிகாரங்கள் வழங்கப்பட்டன.

மாணவிகளுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களைப் பாராட்டியும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மொத்தம் ரூ. 29 ஆயிரம் மதிப்பிலான ஊக்கப் பரிசுகளை ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா். பள்ளி தாளாளா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் இதில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT