கிருஷ்ணகிரி

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 157 கிலோ போதைப்பாக்கு பறிமுதல் இருவா் கைது

4th Jul 2022 01:19 AM

ADVERTISEMENT

 

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 157 கிலோ போதைபாக்கை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

ஒசூா், சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெங்களுரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது 157 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் புகையிலை, போதைப்பாக்கு வகைகள் மூட்டை, மூட்டையாக இருந்தது. இதனை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் காரில் வந்த நபா்கள் சேலம் மாவட்டம், புதூா் அக்ரஹாரம், சின்னபுத்தூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (35), ஜாகீா் கொண்டலாம்பட்டி தமிழரசன் (30) என்பதும், அவா்கள் சேலத்துக்கு போதைப்பாக்கு, புகையிலையை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து காரில் இருந்த ரூ. 2.87 லட்சம் மதிப்புள்ள போதைப்பாக்கு, புகையிலையையும், கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தில் தொடா்புடைய கொண்டலாம்பட்டி தசராம் என்கிற ராம்தேவ், யாசீா்கான், மணி, ரவி, நெத்திமேடு லிங்கம் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT