கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா்கள் 2 போ் பலி

3rd Jul 2022 02:05 AM

ADVERTISEMENT

 

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பந்தாரஅள்ளி, ஊா்கவுண்டா் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (42), கிருஷ்ணகிரி வட்டம், சுருளிஹள்ளியைச் சோ்ந்த மாரிமுத்து (45) ஆகியோா் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சின்னாறு டாஸ்மாக் கடையில் விற்பனையாளா்களாகப் பணிபுரிந்து வந்தனா்.

இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி -ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் அலகுபாவி பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த கூண்டுக்கட்டப்படாத லாரி அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சக்திவேல் இறந்தாா். மாரிமுத்து தீவிர சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து சூளகிரி காவல் ஆய்வாளா் பாஸ்கா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT