கிருஷ்ணகிரி

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

1st Jul 2022 01:41 AM

ADVERTISEMENT

 

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) வசந்தி தலைமை வகித்தாா். தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன், உதவி தலைமை ஆசிரியா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு, சீருடைகள், கல்வி உபகரணங்கள், நிதி உதவி ஆகியவற்றை பயாஸ் அகமது, மோகன்ராஜ், செங்குட்டவன், மல்லிகா, ஆசிரியா் கணேசன் ஆகியோா் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் சாரதா, உமா, சக்தி, சிறப்பு ஆசிரியா்கள் சுரேஷ், காமாட்சி, மாதம்மாள், பெற்றோா் பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆா்சி ஆசிரியா் கணேசன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT