கிருஷ்ணகிரி

ஓய்வு பெறும் நாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம்

1st Jul 2022 10:25 PM

ADVERTISEMENT

ஓய்வு பெறும் நாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி, பெங்களூா் சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக அசோகன் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்றாா். இவா், ஜூன் 30-ஆம் தேதி பணி ஓய்வுபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் அவா் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து, மருத்துவமனை அலுவலா்கள் தெரிவித்ததாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் அசோகன் முதல்வராக இருந்தபோது மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வந்த புகாா் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன் காரணமாக அசோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT