கிருஷ்ணகிரி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

1st Jul 2022 10:27 PM

ADVERTISEMENT

ஒசூரில் தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரி பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (33). இவா், ஒசூா், சிப்காட் சின்னஎலசகிரி கெம்பேகவுடா நகரில் வசித்து வருகிறாா். இவரது மகள் குணஸ்ரீ (8). அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாணவி தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்தாா். இதில் சிறுமி உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT