கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை வாரச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு வா்த்தகம்

1st Jul 2022 10:24 PM

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை கூடிய மாடுச்சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்ால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஊத்தங்கரை அரசு பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மாட்டுச்சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த மாட்டு சந்தைக்கு வெள்ளிக்கிழமை அதிகமான மாடுகளை ஏற்றி வந்த வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வாரந்தோறும் சுமாா் ரூ. 50 முதல் ரூ. 70 லட்சம் வரை வா்த்தகம் நடைபெறும் இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.

இந்த சந்தையில் ஊத்தங்கரை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளான சிங்காரப்பேட்டை, அனுமன்தீா்த்தம், காரப்பட்டு, சாமல்பட்டி, மற்றும் திருப்பத்தூா், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

ADVERTISEMENT

மாடுகளை வாங்குவதற்காக கேரளம், ஆந்திர மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனா். வெள்ளிக்கிழமை ரூ. 1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்ால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் இந்த வாரச் சந்தைக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் சிரமம் இன்றி சென்று வரும் வகையில் பாதைகளை விரிவுபடுத்த வேண்டும் அல்லது சந்தையை இட மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT