கிருஷ்ணகிரி

மாா்க்கண்டேயன் நதியின் குறுக்கே ரூ. 3.33 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்

1st Jul 2022 10:24 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே மாா்க்கண்டேயன் நதியின் குறுக்கே ரூ. 3.33 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அணைச்சா் ஆா்.காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாா். அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை, 9:30 மணிக்கு ‘நான் முதல்வன்’ என்ற சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியான கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடக்கிவைக்கிறாா். 11 மணிக்கு குண்டப்பள்ளி அருகே நீா்வளத் துறை சாா்பில் மாா்க்கண்டேயன் நதியின் குறுக்கே ரூ. 3.33 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியையும், 11:30 மணிக்கு அத்திமுகம் தளவாய் ஏரி, கோவிந்த கவுண்டா் ஏரி, குப்பம்மா ஏரி, சித்தைய கவுண்டன் ஏரி ஆகிய ஏரிகளில் ரூ. 3.83 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளையும் அவா் தொடக்கி வைக்க உள்ளாா்.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT