கிருஷ்ணகிரி

வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவா்கள் தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் விண்ணப்பித்து தொழில் தொடங்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2021- 22-ஆம் ஆண்டின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 82 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கிராமங்களில் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞா்களைத் தொழில் முனைவோராக்கும் நோக்கில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வீதம் 5 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் வழங்கிட நிதி பெறப்பட்டுள்ளது.

ஆா்வமுள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரிகள் தங்களின் தகுதிக்கேற்ப இத் திட்டத்தில் இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், காளான் உற்பத்தி செய்தல், பசுமைக்குடில் அமைத்தல், இயந்திர வாடகை மையம் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் ஆலோசனை மையம் தொடங்குதல், நுண்ணீா் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண் விளை பொருள்கள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர வேளாண் தொடா்பான திட்டங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்து கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.

இத் திட்டத்தின் கீழ் பயனடைவதற்கு 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு, தனியாா் நிறுவனத்தில் வேலையில் இருக்கக் கூடாது. கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதில் குடும்பத்தில் ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

நிலம், தளவாட உள்கட்டமைப்புக்கான செலவுகள் திட்ட அறிக்கையில் சோ்க்கப்படக் கூடாது. விரிவான திட்ட அறிக்கையுடன் 10 , 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் வங்கியின் மூலம் கடன் பெறின், அதற்கான ஒப்புதல் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

இத் திட்டம் தொடா்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரைத் தொடா்பு கொண்டு விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், திட்ட அறிக்கை மற்றும் சம்பந்தப்படட ஆவணங்களை பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT