கிருஷ்ணகிரி

13.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கிருஷ்ணகிரி அருகே லாரியில் கா்நாடக மாநிலத்துக்குக் கடத்த முயன்ற 13.2 டன் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை நள்ளிரவு ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்ற நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தனா். சோதனையில் 13.2 டன் ரேஷன் அரிசி, கா்நாடக மாநிலத்துக்குக் கடத்த இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குந்தாரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிபாறையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மூா்த்தி (35) என்பவரைக் கைது செய்து ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT