கிருஷ்ணகிரி

நாளை மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம்

27th Jan 2022 06:42 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம், திமுக மாவட்ட பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் தலைமையில், கூட்டணி கட்சிகளின் தலைவா்கள், செயலாளா்கள் முன்னிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவா்கள், செயலாளா்கள் திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் மட்டும் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT