கிருஷ்ணகிரி

தந்தை கொலை: மகன் கைது

27th Jan 2022 06:42 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே தந்தையைக் கொன்ாக மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஏக்கல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் (68). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த 21-ஆம் தேதி அந்தப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற இவா் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், அங்குள்ள வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். சடலத்தைக் கைப்பற்றிய மகாராஜகடை போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா்.

இந்த நிலையில், முனியப்பனை அவரது இரண்டாவது மகன் வெங்கடேசன் (எ) சின்னபையன் (37), கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT